Monday, September 10, 2012

இந்திய பிரதமரையும் தமிழக முதல்வரையும கேவலப்படுத்தியது இலங்கை நாளேடு!

தமிழக முதல்வரையும் , இந்திய பிரதமரையும் கொச்சை படுத்தும் விதமாக அசிங்கமான முறையில் கேலிச் சித்திரம் வரைந்துள்ளது சிங்கள அரச ஆதரவு நாளிதழ் லக்பிம . ஒரு பெண்ணை எவ்வளவு கீழத்தரமாக சித்தரிக்க முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக சித்தரித்து உள்ளது இந்த சிங்கள ஊடகம் .
இந்தியாவில் நேர்மையான முறையில் அரசை கண்டித்து கேலிச்
சித்திரம் வரைந்தால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும். ஆனால் சிங்களவன் வரைந்து வெளியிட்டால் இந்திய அரசு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காது.
சிங்களவர்களை தமிழக மக்கள் அனைவரும் கண்டிப்பதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து சிங்களவர்களையும் விரட்ட வேண்டும் . இலங்கை உடனான அனைத்து உறவுகளையும் தமிழக அரசு உடனே துண்டிக்க வேண்டும் என்று பொங்குகின்றனர் இந்த படத்தை பார்த்து அதிர்ச்சியுற்ற தமிழ் உணர்வாளர்கள். தமிழக முதல்வர் இது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுப்பார் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என கூறுகிறார் தமிழ்நாட்டு தமிழர் ஒருவர்.


No comments:

Post a Comment