Sunday, September 30, 2012

ஆறுமுகனின் சாணக்கியம்; சப்ரகமுவவில் இரு தமிழர் கன்னியுரையில் லலிதா நன்றி தெரிவிப்பு

n4“அமைச்சர் ஆறுமுகன் தொண் டமானின் அரசியல் சாணக்கியத் தினாலேயே சப்ரகமுவ மாகாண சபைக்கு இரு தமிழ் பிரதிநிதிகள் வரும் வாய்ப்பு கிட்டியது.
இச்சந்தப்பத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் லலிதா கே. இராமச்சந்திரன் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண சபையின் முதலாவது கூட்டத்தொடர் கடந்த 27ம் திகதி நடை பெற்றது. இக்கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றியஅவர் கூறியதாவது; என்னை இரண்டாவது முறையாகவும் இச்சபைக்கு தெரிவு செய்த மக்களுக்கு எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, எனது வெற்றி யில்
பங்கெடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி யைத் தெரிவித்தார்.
அத்தோடு மலையக தமிழ்க் கூட்டமைப் பின் கட்சி தலைமைகள் மற்றும் உறுப்பி னர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து தொடர்ந்து உரையாற்றிய அவர்; இரத்தின புரி, கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் எம்மை நம்பி வாக்களித்துள்ளனர். இவர்களுக்கு வாழ்வாதாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளமை அனைவரும் அறிந்ததே இச்சந்தர்ப்பத்தில் இவர்களுடைய பிரச்சினையை தீர்க்க சபையின் முதலமைச்சர் உட்பட அனைத்து தரப்பினரினதும் உதவியை எதிர்பார்க்கின் றோம் என்றார்.

No comments:

Post a Comment