Sunday, September 30, 2012

மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?

Tamil_News_large_557038“மத்திய அரசில், புதிதாக அமைச்சர் பதவிகளை கேட்பதில்லை’ என, தி.மு.க., முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டாலும், ரயில்வே, மின்சாரம் போன்ற கட்டமைப்பு துறைகளை, அந்தக் கட்சி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், இவற்றை தர, காங்கிரஸ் மறுக்கிறது என்பதுடன், சரத் பவார் கட்சியால், மகாராஷ்டிராவில், திடீரென ஏற்பட்ட பிரச்னைகள்காரணமாகவும், மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அரசிலும், கட்சியிலும், அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர, காங்கிரஸ் தீவிரமாக இருந்தது. திட்டமிட்டபடி, நேற்று முன்தினமே அமைச்சரவை மாற்றம்
நிகழ்ந்திருக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் தான், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின், காஷ்மீர் பயணத் திட்டமும் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அமைச்சரவையை மாற்ற, மன்மோகன் சிங்கும், சோனியாவும் தீவிரமாக ஆலோசனை செய்து, இறுதிக் கட்ட பணிகளைக் கூட முடித்து விட்ட நிலையில், திடீரென நேற்று முன்தினம், அமைச்சரவை மாற்றம் நடைபெறாமல் தள்ளிப் போயுள்ளது.
காரணங்கள்:

மத்திய அமைச்சரவை மாற்றம், தள்ளிப் போனதற்கான காரணங்களாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, சென்னையில், கருணாநிதியை சந்தித்த பின், அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்காது என, தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., தலைவரின் பேட்டி மற்றும் பத்திரிகை செய்திகள் பலவற்றிலும், இந்தத்தகவல் உறுதி செய்யப்பட்டது.டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு போன்ற முடிவுகளை, மத்திய அரசு எடுத்துள்ள சூழ்நிலையில், அமைச்சர் பதவிகளை பெற, தி.மு.க., விருப்பமில்லை. மேலும்,அமைச்சர்கள் பதவி விவகாரத்தில், குடும்ப உறுப்பினர்களை, திருப்திபடுத்த முடியாது என்ற காரணத்தாலும், அமைச்சர் பதவிகளை ஏற்க வேண்டாம் என, கருணாநிதி முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், உண்மை அதுவல்ல. முக்கிய துறைகளை தி.மு.க., கோரி வருகிறது. குறிப்பாக, ரயில்வே மற்றும் மின்சாரம் போன்ற துறைகளை, தங்களுக்கு அளிக்கும்படி, காங்கிரசிடம் கேட்டுள்ளது.அந்தக் கோரிக்கையை ஏற்க, காங்கிரஸ் தயாரில்லை. நீண்ட காலத்திற்கு பின், தங்கள் வசம் வந்திருக்கும் ரயில்வே துறையை இழக்க, அந்தக் கட்சி தயாரில்லை.”மிகப் பெரிய அளவில், நிதி புழங்கும் இந்த கட்டமைப்பு துறைகளை கைவிடக் கூடாது’ என்பதில், காங்கிரஸ் தலைமைஉறுதியாக இருப்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை

No comments:

Post a Comment