
சீன ஜனாதிபதி ஹு
ஜிந்தாவோவுக்கு மட்டுமான இரண்டாவது தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள
பென்ஹுவோ இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய சீன ஜனாதிபதியின் காலத்தின் பின்னர்
அந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படும் இவர்,
தனது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்தையரையும் சந்திக்கவுள்ளார்.
பென்ஹுவோ இம்மாதம் 9 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் நான்கு நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளளார். இவரின் இந்த நிகழ்ச்சி நிரலிலேயே இலங்கைக்கான விஜயமும் உள்ளடங்குகிறது. ஜனாதிபதி மஹிந்தையரின் சகோதரரான சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கை வருகிறார்.
சீன பாதுகாப்பு அமைச்சரும் அண்மையில் இலங்கை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment