மதுரையில்
தனியார் உணவு விடுதி ஒன்றில் பணிபுரியும் சிங்களவர்களை வெளியெறக்கோரி
ம.தி.மு.க. வினரின் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மதுரை கோச்சடை பகுதியில் பிரபல தனியார் உணவு விடுதி உள்ளது. இந்த உணவு விடுதியில் இலங்கையை சேர்ந்த ஸ்ரீநித் டிசில்வா பொதுமேலாளராகவும், தலைமை சமையலராக முரைஷ் என்பவர் உட்பட 16 பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பக்கோரி 15 பேர் இன்று காலை அந்த உணவு விடுதியை முற்றுகையிட்டனர். அப்போது மகிந்தாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்த அந்த உணவு விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று சிங்களர்களுக்கு எதிராக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை யாத்திரிகர்கள் 184 பேர் தமிழ்நாடு பூண்டி மாதா ஆலயத்திற்குச் சென்றிருந்த நிலையில் அவர்களையும் முற்றுகை இட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை தெரிந்ததே.
இதனைத் தொடர்ந்து அவர்கள் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை இலங்கை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment