மகிந்த
ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை உடனே எதிர்க்க வேண்டும். அதைமீறி
தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தி தமிழின எதிரி ராஜபக்சவிற்கு வரவேற்ப்பு
கொடுப்பார்களானால் தமிழின இந்துக்கள் தனக்கு ஒரு புதிய மதமாக தமிழர்
மதத்தை உருவாக்க முயலும் என தமிழர் முன்னேற்றக்கழகம் எச்சரிக்கிறதுஇலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சனிக்கிழமை சென்னையில் தமிழர் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் அதியமான், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், தமுக மாநில பொறுப்பாளர்கள், திருச்சி ஜெயதேவ் பாலச்சந்திரன், தமிழர் எழுச்சி இயக்க வேலுமணி, தமிழர் பண்பாட்டு நடுவம் ராஜ்குமார் பழனிச்சாமி, மே 17 இயக்க உமர், உலக தமிழர் பாதுகாப்பு இயக்க ராஜா ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் ரமேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
ஈழத்தில் நடந்தது ஒரு இனப் படுகொலை அதை முன்னின்று நடத்தியது சோனியாவின் காங்கிரஸ் அரசு. எதிர்கட்சியான பாஜக இங்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் நம்மோடு இருந்து, தமிழக மீனவர்களுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது என தமிழர்கள் அதன் மீது சிறிது பற்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இலங்கை செல்லும் தூதுக்குழுவிற்கு தலைமையாக சென்ற பாஜக வின் சுஸ்மா சுவராஜ், ராஜபக்சவை தனிமையாக சந்தித்துவிட்டு இங்கு வந்தவுடன் தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை என பொய் சொல்ல தொடங்கினார்.
அதன் பிறகு அவரின் சொந்த தொகுதியில் ராஜபக்சவிற்கு வரவேற்ப்பு கொடுக்க காத்திருக்கிறார். ‘ராஜபக்சவின் வரவு இந்திய இலங்கை உறவை பலப்படுத்தும் என்கிறார். தமிழர்கள் ராஜபக்ச இந்தியா வருவதை எதிர்க்கவில்லை என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார் முரளிமனோகர் ஜோசி.
அன்று இராமர் கோவில் கட்ட இந்தியா முழுக்க இந்துக்களை திரட்டிய பாஜக, இராமர் பாலம் காக்க இன்றும் வலுவாக குரல் கொடுக்கும் பாஜக, ஈழத்தில் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் என தெரிந்து வலுவாக போராடி இருக்க வேண்டும். செய்ததா? இல்லை.
இன்றுவரை நூற்றுக்கணக்கில் இந்து கோவில்களை இடித்த ராஜபக்சவை பரம எதிரியாக நினைத்து அவன் கொட்டத்தை வேரரறுக்க முனையுமென்றால், அதற்க்கு முற்றிலும் மாறாக தமிழர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, நாங்கள் நடத்தியதே நாடகம்தான் என்பதுபோல் தமிழகளுக்கு எதிரியான ராஜபக்சவின் உறவுதான் எங்களுக்கு முக்கியம் என உள்ளொன்று வைத்து புறம் ஓன்று பேசி செயல்படுவதை தமிழர் முன்னேற்றக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது
நடந்ததது இனப்படுகொலை என உலக அரங்கில் தனி ஈழத்திற்கான ஆதரவு பெருகி வரும் நிலையில் அதற்க்கு எதிராக தனிநாடு தேவையில்லை என பேசும் கட்சிகள்- ஏன் தனி ஈழத்தை எதிர்க்கிறோம் என வெளிப்படையாக கூற தயாரா?
கொலைகாரனுடனே கூடிவாழுங்கள் என புத்திமதி சொல்லும் கட்சிகள் இந்தியம் காக்க அக்கருத்தை சொல்லவில்லை. இந்தியம் காக்க நினைப்பவர்கள் இந்தியத்தை நேசித்த தமிழர்களுக்கே அதரவளித்திருக்க வேண்டும். சீனாவை ஆதரிக்கும் சிங்களவனுக்கு ஆதரவளித்திருக்க முடியாது.
இவர்கள் காக்க நினைப்பது இந்தியம் என்ற பெயரில் ஆரியத்தைதான். ஆரியத்தை காக்க நினைப்பவர்கள் ஆரியர்களை வைத்தே காக்கலாம். அதைவிட்டு தமிழர்களை பலிகொடுத்து இந்தியம் காக்க நினைப்பது வெட்ககேடானது.
தமிழர்களின் உணர்வுகளுக்கு உண்மையிலேயே மதிப்பு கொடுத்தால் ராஜபக்ச இந்தியத்திற்கு வருவதை உடனே எதிர்க்க வேண்டும். அதைமீறி தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தி தமிழின எதிரி ராஜபக்சவிற்கு வரவேற்ப்பு கொடுப்பார்களானால் தமிழின இந்துக்கள் தனக்கு ஒரு புதிய மதமாக தமிழர் மதத்தை உருவாக்க முயலும் என தமிழர் முன்னேற்றக்கழகம் எச்சரிக்கிறது.
No comments:
Post a Comment