Tuesday, September 18, 2012

இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கைக்கு கடத்த முயன்றவர் கைது

arrastஇந்திய ராணுவ ரகசியங்களை  இலங்கைக்கு கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். இந்தியாவில் உள்ள துறைமுகம், ராணுவ பயிற்சி மையம் ஆகியவற்றின் வீடியோ, வரைபடம் ஆகிய வற்றை தயாரித்து கடத்த முயன்ற தமீம் அன்சாரி என்பவரை திருச்சியில் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்.
காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் நேற்று இரவு தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தன.

அவர் திருச்சி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டார். அவரை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன் றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment