Tuesday, September 18, 2012

இலங்கை – சீனா 10க்கும் மேற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

n1உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சீன மக்கள் காங்கிரஸின் தலைவர் வூ பங்குவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பயனுள்ள 10ற்கும் மேற்பட்ட முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் இரண்டாம் கட்டத் திட்டங்களுக்கு கடன்பெற்றுக் கொள்வதற்கான சில ஒப்பந்தங்கள், இலங்கைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கான் இயந்திரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம், ஐந்து வருடங்களுக்கு நிதி ஒத்துழைப்புத் திட்டம்

தொடர்பான ஒப்பந்தம், கொழும்பு தாமரை கோபுரத்திட்டத்துக்கான ஒப்பந்தம், இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள் பிரிவுக்கான நிதியினை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் இங்கு கைச்சாத்திடப்பட்டன.
அத்துடன் பண்டாரநயாக்க ஞாபகார்த்த மண்டபத்துக்கு வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கு மிடையில் ஆவணப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை பாரிய அபிவிருத்தியில் கட்டுயெழுப்பப்பட்டு வருவதுடன், இப் பயணம் வெற்றிகரமாக எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்படும் என்பதை தாம் உறுதியாக நம்புவதாகவும் சீன மக்கள் காங்கிரஸின் தலைவர் வூ பங்குவோ தெரிவித்தார்.
சீன மக்கள் காங்கிரஸ் தலைவரின் தலைமையில் சீன அரசாங்கத்தின் உயர் மட்டத் தூதுக்குழுவொன்று இலங்கை வந்திருப்பதுடன், இந்தத் தூதுக்குழுவினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் மகத்தான வரவேற்பளித்தார். இலங்கையின் நெருங் கிய நட்பு நாடான சீனா அன்று தொட்டு இலங்கை மக்களின் நலன்கள் தொடர்பில் சிறப்பாகச் செயற்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சீன மக்கள் காங்கிரஸின் தலைவர் வூ பங்குவோ, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் தற்போது பெரும் முன்னேற்றம் அடைந்தி ருப்பதாக இந்த நட்புறவு மிகவும் முக் கியமானது எனவும் தெரிவித்தார். அத்துடன், தலைவர்களுக்கு இடை யிலான இத்தகைய நேரடி கருத்துப் பரிமாற்றங்கள் மிகவும் பயனுள்ளது எனுவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஒரே சீனா ஒரே நாடு என்ற கொள்கையை மதிப்பது எமது வெளிநாட்டுக் கொள்கையில் முக்கிய அம்சமாகும் எனத் தெரிவித்தார். பிராந்திய மற்றும் இருதரப்பு மட்டத்திலும் சீனாவுக்குப் பொருத்தமான அந்நாட்டின் உயர்வுக்குக் காரணமாகும் சகல பிரச்சினை களிலும் சீனாவுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான பொரு ளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்து ழைப்பு சம்பந்தமாக கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் அது இரு நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களும் சம்பந்தப்படும் கூட்டுத்தாபனமாக இருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள ஒத்துழைப்புக்களின் பயனாக வணிகம், அறிவுத்திறன், கடல் மற்றும் ஆகாய கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்து வருவதுடன் அதன்மூலம் இலங்கையில் முதலீட்டு வேலைவாய்ப்புக்களுக்கு சீன முதலீட்டாளர்களுக்கு சிறந்த பின் னணியை வகுத்துக் கொடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி சீன அரசாங்கமானது சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கையின் அபிவிருத்திக்கு வழங்கி இலங்கையின் அபிவிருத்தியின் முக்கிய பங்காளியாக திகழ்கிறது எனவும் ஜனாதி பதி தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த சீன மக்கள் காங்கிஸ் தலைவர், இரு நாடுகளுக்குமிடையிலான வாணிபத் தொடர்புகளின் அடிப்படையில் இலங்கை யின் உற்பத்திப் பொருட்களை பெருமளவில் இறக்குமதி செய்யும் வகையில் சீன நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்கப் படும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தகர்களுக்கான வரி அறவீடுகளைக் குறைக்கவும், சீனாவில் இலங்கையர்கள் முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், இலங்கை சீன சமுத்திர ஒத்துழைப்புக்காக கேந்திர மத்திய நிலையமொன்றை அமைப்பது மற்றும் கடல் கண்காணிப்புக் கட்டமைப்பொன்றை நிறுவுவது தொடர்பிலும் கலந்துரையாடி யுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 19வது அமர்வின்போது இலங்கைக்கு ஆரவு வழங்கியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீன அரசாங்கத்துக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அத்துடன், 2014, 2016 காலகட்டங்களில் மனித உரிமைப் பேரவையின் சீன உறுப்புரிமைக்கு உச்ச அளவில் ஒத்துழைப் பைப் பெற்றுத் தருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுப்பதில் சீன அரசாங்கம் வழங்கிய பூரண ஒத்துழைப்புக்கு இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment