Sunday, September 23, 2012

வீரத்தமிழ் மகன் விஜயராஜ்ற்கு வீர வணக்கம் தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு யேர்மனி.

VIJAYARAJதமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை இந்திய மண்ணில் கால்பதிக்க அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை முன்வைத்து கடந்த 17.09.2012 அன்று தமிழ் நாடு சேலத்தில் தன்னைத்தானே தீமூட்டி சாவடைந்த வீரத் தமிழ் மகன் தங்கவேல் விஜயராஜ் அவர்கட்கு ´தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு யேர்மனி” தனது வீர வணக்கத்தை தெரிவிக்கின்றது.
பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை வயது வேறுபாடின்றிக் கொன்றுகுவித்து, வசந்தம் நிலவிய எங்கள் வாழ்விடங்களை சாம்பல் மேடுகளாக்கி, பசுமை கொலுவிருந்த விளை நிலங்களை இரும்புக் கவசங்களால் வல்வளைப்புச் செய்து தமிழ் இனத்தின் இறையாண்மையை சீர்குலைத்து சிங்கள இனவாத அடக்குமுறைகளை இன்னும் நிலைநாட்டி வரும் மகிந்த ராஜபக்சவை இந்திய மண்ணில் கால்பதிக்க அனுமதிக்கக்
கூடாது என கோரிக்கை முன்வைத்து கடந்த 17.09.2012 அன்று தமிழ் நாடு சேலத்தில் தன்னைத்தானே தீமூட்டி சாவடைந்த வீரத் தமிழ் மகன் தங்கவேல் விஜயராஜ் அவர்கட்கு ´´தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு யேர்மனி” தமிழ் மக்களின் சார்பில் தனது வீர வணக்கத்தை தெரிவிக்கின்றது.
இனவிடுதலையை தமக்கு உரித்துடையதாக்கி தேச விடுதலைப்பயணத்தில் ஒட்டு மொத்த தமிழினமும் கொடுத்திருக்கின்ற உயிர்விலையும், அர்ப்பணிப்பும் அளவிட முடியாப் பதிவாகியும் உலக மனக்கண்கள் எம் பக்கம் ஈர்க்கப்படாமல் இருப்பது இன்றுவரை ஒரு துர்ப்பாக்கிய நிலையாகவே தொடர்கிறது.
ஒரே தடவையில் கொத்துக் கொத்தாக வீழ்ந்த தமிழினத்தின் துயரைக்கூட உணராத பின்பும் தொடர்ச்சியாக உயிர்த் தியாகங்களைச் செய்வதை இயன்றவரை தவிர்த்து உயிர்க் கொடைக்கு இணையான அறவழிப் போர்களின் மூலம் தமிழினத்தின் உண்மையையும், உறுதியையும் நிலைநாட்டி உலகப் பரப்பில் எம்மை நிலை நிறுத்த தெடர்ந்தும் உழைப்போமென உறுதியெடுப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு
ஜேர்மனி.

No comments:

Post a Comment