Monday, September 24, 2012

வடக்கில் இராணுவ நிர்வாகமே நடைபெறுகிறது; விக்கிரமபாகு கருணாரத்ன குற்றச்சாட்டு

6c9172b931c67233428cc690e51be552வடக்கில் சிவில் நிர்வாகம் நடைபெறவில்லை முழு மை யாக இராணுவமே நிர்வாகமே நடைபெற்று வருவதாக நவ சமச மாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கரு ணா ரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் வடபகுதி தமிழ் மக்க ளு க்கு சிவில் நிர்வாகம் வழங்க ப்பட் டுள் ளதாக அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. ஆனால் அங்கு நேரில் சென்று பார்த்தால் உண் மையை புரிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கோப்பாப்பு ல வில் தமிழ் மக் கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை இரா ணு வம் பலாத்காரமாக பறித்தெடுத்து ள் ளது. அதனை மக்களுக்கு வழங்குமாறு வலியு றுத்தி நாம் ஜனநாயக ரீதியில் ஆர்ப் பா ட்டம் நடத்தினோம்.

இதன்போது பொ லி ஸா ரும் பெரு மள விலான இரா ணு வ மும் காவல் கடமை யில் ஈடுபட்டிருந்தனர். அவ் வாறானதோர் சூழ் நிலையில் ௭ம்மீது ‘௭ன்ஜின் ஒயில்’ தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சு இடம்பெற்றது. அனைத்தும் இரா ணுவ பாதுகாப்புடனேயே இடம் பெ ற்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று வெள்ளை வான் கடத் த லு க்குப் பதி லாக கல் வீச்சும், ௭ன்ஜின் ஒயில் வீச் சும் மக்கள் மீது நடத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment