அரசியல்
தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பது தொடர்பிலும்,
ஸ்தம்பித்துப் போயுள்ள கூட்டமைப்புடனான பேச்சுக்களை முன்னெடுப்பது
தொடர்பிலும் அரசு உடனடிக் கவனத்தைச் செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
இந்த இரு விடயங்களிலும் துரிதமான கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் கடந்த
வாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப்
பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையடுத்தே அரசு இந்த விடயத்தில் தீவிர
கவனத்தைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தீர்வுப்பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அழைப்பை அரசு
இன்னமும் ஓரிரு தினங்களில் கூட்டமைப்புக்கு விடுக்குமென அரசின் மூத்த
அமைச்சரொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு அங்கம் பெறுவது
குறித்தும், அதனூடாக அரசியல் தீர்வுப் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பது
பற்றியும் இந்தியாவுக்குப் புறப்பட முன்னர் ஜனாதிபதி மஹிந்த தமிழ்க்
கூட்டமைப்பின் தலைவருடன் பேச்சு நடத்தியிருந்தார்.
அரசு தீர்மானித்துள்ளதால் தமிழ்க் கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டுமென்றும் அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment