Saturday, September 08, 2012

ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரின் நடவடிக்கைகளினால் எதிர்காலத்தில் பயங்கரவாதம் வெடிக்கக் கூடிய அபாயம்: - விக்ரமபாகு


 மஹிந்த அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர்கள் தேசத்துரோகிகள் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தில் உள்ள பலர் தேசத்துரோகிகள் வறிய மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை சுரண்டிக் கொள்ளையிட்டு நன்மைகளை அடைவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
டெசோ மாநாட்டில் எனது உரைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன அவ்வாறு எந்த விதமான இடையூறுகளும் ஏற்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தின் மூலம் புரட்சி செய்ய முடியும் என்பது எனது நிலைப்பாடல்ல, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரின் நடவடிக்கைகளினால் எதிர்காலத்தில் பயங்கரவாதம் வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
வடக்கு மக்களுக்கு 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளிலும் இதுவே வலியுறுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், இதுவரையில் பரிந்துரைகளை அமுல்படுதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் மேலும் குற்றசுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment