Friday, September 07, 2012

மகிந்தவின் நிகழ்ச்சி நிரல்களை உறுதிப்படுத்த சிறிலங்காவின் உயர்மட்டக்குழு புதுடெல்லி பயணம்

MR- facecutசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளை உறுதி செய்வதற்கு, சிறிலங்காவில் இருந்து முன்னோடி குழுவொன்று அடுத்தவாரம் புதுடெல்லி வரவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
தனிப்பட்ட பயணமாக இந்தியா வரவுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 20ம் நாள் புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதற்கு முன்னோடியாக அவரது புதுடெல்லிப் பயண நிகழ்ச்சிகள் குறித்த பணிகளை மேற்கொள்ள உயர்மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் கொழும்பில் இருந்து வரவுள்ளது.
இந்தக் குழுவில் சிறிலங்காவின் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் இடம்பெறக் கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இரு நாடுகளின் தலைவர்களும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 21ம் நாள் சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment