இந்தியாவுக்கு
செப்டம்பர் 20-ம் தேதி வரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, தில்லியில்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் இந்தியப் பிரதமர் மன்மோகன்
சிங்கையும் சந்திக்கிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை
தெரிவித்தன.
முதலில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள
சாஞ்சிக்கு செல்லும் ராஜபட்ச, பின்னர் தில்லிக்குச் சென்று இரண்டு
தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார். இதில், ராஜபட்சவின் சாஞ்சிப் பயணம்
உறுதி செய்யப்பட்டுவிட்டது. தில்லிப் பயணம் இன்னமும் உறுதி
செய்யப்படவில்லை. சாஞ்சிக்கு வரும் ராஜபட்சவை மத்தியப் பிரதேச முதல்வர்
சிவராஜ் சிங் செüகான் வரவேற்கிறார்.
அங்கு பெüத்த சமய மையத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார் ராஜபட்ச.இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தமிழகத்துக்கு வந்த 184 சிங்கள சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டதற்கு காரணம் தமிழக மக்கள் அல்ல; மாறாக, தமிழகத்தில் தங்கியிருக்கும் புலம் பெயர்ந்தவர்களே என்று இலங்கை வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நியோமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment