செட்டிகுளம்
நலன்புரி முகாமில் இருந்து நேற்று அழைத்துவரப்பட்ட கேப்பாபிலவு, மந்துவில்
கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது
கூடத் தெரியாமல் திண்டாடினார்கள்.
” நாம் அவர்களுடன் பேசிய போது அவர்கள் எங்கு கொண்டு
செல்லப்படுகிறார்கள்? எங்கே குடியமர்வு செய்யப்பட உள் ளார்கள்? என்பது
குறித்த எந்தத் தகவலும் அவர்களுக்குப் முழுதுமாகத் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் பலர் தாம் எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்பது தெரியாமல் கண்ணீர்
விட்டவாறு இருந்தனர் என்று எமது செய்தியாளர் அங்கிருந்து
தெரிவித்திருந்தனர்.
“எங்க கொண்டு போறாங்களோ எங்களுக்குத் தெரியாது. பஸ்ஸில ஏத்தினாங்கள்.
இஞ்ச கொண்டு வந்து விட்டிருக்கிறாங்கள். இனி எங்க கொண்டு போயினமோ தெரியேல.
இந்த நிலமேல நீங்கள் எங்கள வந்து கேக்கிறியள் எங்க போறியள் எண்டு.” என்று
எமது செய்தியாளரிடம் தனது கவலையைக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார் குடும்பப்
பெண் ஒருவர்.
No comments:
Post a Comment