Tuesday, September 25, 2012

முள்ளிவாய்க்காலில் தளம் இன்று திறக்கிறார் ஜனாதிபதி

makindaவன்னிக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன் முள்ளி வாய்க்காலுக்கும் சென்று அங்கு படைமுகாம் ஒன்றைத் திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இன்று காலை கிளிநொச்சிக்கு வரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறும் வடக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பார்.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரச அதிபர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்பின்னர் நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்துக்கான “லக்ஷபான” மின் விநியோகத்தை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கிறார்.
இதன்பின்னர் அவர் கிளிநொச்சி மத்திய சந்தையையும், பிற்பகல் 3 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தையும் திறந்து வைப்பார்.தனது வன்னிப் பயணத்தின் முடிவில் அவர் முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அங்கு நிலைமைகளைப் பார்வையிடுவார்.

No comments:

Post a Comment