உலகத்தமிழ்ப்
பண்பாட்டு இயக்கத்தின் முன்நாள்தலைவரும் தற்போதய சிறப்புத்தலைவருமான
தமிழ்ச்செம்மல் செல்லையா அவர்களின் மறைவதனில் நாம் ஆழ்ந்த துயருறுகின்றோம்.
இரா.வீரப்பனார் 03.09.1999ல் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து 1999ம் ஆண்டு உ.த.பண்பாட்டு இயக்க தலைவராகப் பொறுப்பேற்று இயக்கத்தை வழி நடத்தினார்.
2001ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் தமிழர்நாம் இன்றும் என்றும் தமிழால் கூடி உயர்வோம் என்னும் கருப்பொருளில் எட்டாவது உலக மாநாட்டினை நடாத்தினார். எமது இயக்கம் 2000ம் ஆண்டு கனடாவில் பதிவு பெறக் காரணமானவரும் இவரே. தமிழில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். தமிழ்
உலகநாடுகளில் வளரவேண்டும் என்னும் அவாவுடன் பணியாற்றியவர்.
உடல் தளர்வுற்ற போதிலும் பாரீசில் 2011ல் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தார். இவரது உற்றார் உறவினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் இவரது துயரில் நாமும் பற்கு கொள்கின்றோம்.
கி.யேம்ஸ் அல்ஸ்ரன்
இணைத் தலைவர் – கல்விப்பொறுப்பாளர்
உ.த.பண்பாட்டியக்கம் (ஜரோப்பா)
No comments:
Post a Comment