தியதலாவ இராணுவ முகாமில் மண் குவியலொன்று சரிந்து வீழ்ந்ததால் இராணுவ
வீரர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு விசாரணை மன்று
நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.விடுமுறைக்கால பங்களாவொன்றுக்கான நிலத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே மேற்படி சம்பவம் இடம்பெற்றதாகவும் இதையடுத்து மேற்படி பங்களா நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இக்குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜி.வி. ரவிப்பிரிய கூறினார்.
இதேவேளை, மேற்படி சம்பவத்தின்போது காப்பாற்றப்பட்ட இராணுவ வீரர்கள் இருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment