Monday, September 17, 2012

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான போட்டி தீவிரம்

chief1கிழக்கு மாகாண  முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள முஸ்லிம் கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ளது.
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸும், அமீர் அலியை முதலமைச்சராக்க வேண்டுமென கோருகின்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அமீர் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை தனது கட்சியின் தூதுக்குழுவொன்று நேற்று சந்தித்து முதலமைச்சர் பதவியை கோரியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறினார்.
‘அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸும் இதுதொடர்பாக எம்முடன் புரிந்துணர்வுக்கு வந்துள்ளது. நாம் கோரிக்கையை முன்வைத்தோம். இதுதொடர்பாக இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை’ என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கூறினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்விடயம் தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment