Monday, September 17, 2012

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளை 20 ம் திகதி சம்பந்தன் குழுவினர் சந்திப்பர்!

TNAஇலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை தமிழ் தே சி யக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம் ப ந்தன் தலைமையிலான குழுவினர் ௭திர்வரும் 20 ம் திகதி சந்தித்து பேசவுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளான ஹன்னி மெகாலியும், ஆஸ்கர் செல்டர்ஸ் ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் ஆளுங்கட்சி, ௭திர்க்கட்சி உறுப்பினர்கள் பலரையும் சந்தித்துப்
பேசுவதுடன் யுத்தம் இடம்பெற்ற வடபகுதிக்கும் விஜயம் செய்கின்றனர்.
வடபகுதிக்கான விஜயத்தை இந்த பிரதிநிதிகள் பூர்த்தி செய்ததும் இவர்களை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக் குழு சந்திக்க திட்டமிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் மேற் கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல் தொடர்பில் சம்பந்தன் குழுவினர் இந்தப் பிரதிநிதிகளுக்கு விளக்குவார்கள் ௭ன ௭தி ர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment