Tuesday, September 11, 2012

இந்தியக் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் கூற்றுக்கு எதிர்ப்பு

eca2d44fdc21e975e14713dbf566d6bdஇலங்கையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் கூற்றுக்கு இராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழகக் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வி.மைத்திரேயன் கொண்டுவந்த கவன ஈர்ப்பு பிரேரணைக்கு பதிலளிக்கு முகமாகவே இந்திய கடற்றொழிலாளர்கள் எவரும் இலங்கையில் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் இந்திய அரசாங்கம் இலங்கையுடன் மீனவர் பாதுகாப்பு தொடர்பில் பேசி வருவதாகவும் அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்திருந்தார்.

போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மட்டுமே இலங்கையில் உள்ளனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மட்டுமே இலங்கையில் உள்ளனர் என அமைச்சர் கிருஷ்ணா கூறியதையிட்டு தாம் அதிர்ச்சி அடைவதாக தமிழ்நாடு கரையோர இயந்திர படகு மீனவர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
போதைவஸ்து கடத்தினர் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில், தமது சங்கங்களின் எல்லைப் பரப்பைச் சேர்ந்த ஐந்து கடற்றொழிலாளர்கள், கடந்த வருடத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அச் சங்கம்,
குறித்த கடற்றொழிலாளர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேசி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment