Tuesday, September 11, 2012

ஜனாதிபதியுடன் டி.ஆர்.பாலு சந்திப்பு: டெசோ மாநாட்டு தீர்மான நகலை வழங்கினார்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அறிவுரையின் பெயரில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் 10-ந் தேதி (நேற்று) பிற்பகல் சந்தித்து பேசினேன். 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, டெசோ சார்பில், ஆகஸ்டு 12-ந் தேதி நடத்தப்பட்ட தமிழ் ஈழம் உரிமை பாதுகாப்பு மாநாடு விளைவுகள் பற்றி எடுத்துரைத்தேன்.
மேலும், நானும், மு.க.ஸ்டாலினும், அமெரிக்கா சென்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை நிழூயார்க்கில் சந்தித்து பேசுவது குறித்தும், ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளில் கமிஷனரை சந்தித்து பேசும் திட்டம் குறித்தும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் எடுத்துரைத்தேன். டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் அவரிடம் வழங்கினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment