Friday, September 14, 2012

பொங்குதமிழ் எழுச்சி மக்களை விடுதலைக்காக அணிதிரள வைக்கும்! கனேடிய தமிழர் தேசிய அவை

ponkutamilஎதிர்வரும் 22 .09 .2012 அன்று ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து கனடா தமிழ் மக்களின் சார்பாக கனேடிய தமிழர் தேசிய அவையின் தமிழ் மொழிக்கான ஊடக பேச்சாளர் திரு தேவாசபாபதி அவர்கள் ஐரோப்பிய தமிழ் மக்களை நோக்கி உரிமையோடு பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளார் .
தமிழீழ புலம்பெயர் மக்கள் ஒன்று கூடி தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழர் கோட்பாட்டை வலியுறுத்தி எழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு தமது விடுதலை நோக்கிய பாதையை வலுப்படுத்த வேண்டும் .
பல்லாயிரக்கணக்கில் மக்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை எந்த சக்தியாலும் மழுங்கடிக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்த வேண்டி உள்ளோம்.

விரைவில் நடைபெறவிருக்கும் பொங்குதமிழ் நிகழ்வுக்கு எமது மக்கள் திரண்டு சென்று எமது தாயக மக்களின் விடுதலைக்காக ஓங்கி குரல் கொடுப்பார்கள் என நம்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment