தெற்கு
மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபட்
ஓ.பிளேக், இலங்கையின் வடபகுதி பொருளாதார நிலை குறித்து தனது ஆர்வத்தை
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்தபோது வெளிப்படுத்தியுள்ளார்.
ரொபட் ஓ பிளேக்கிற்கு அபிவிருத்தி நடவடிக்கைகள், இடம்பெயர்ந்தோரின்
மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளின் சமூக இணைவு ஆகியவை தொடர்பில்
அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஜெனீவா அமர்வில் அமெரிக்க அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இச்சந்திப்பின்போது எதுவும் பேசப்படவில்லை என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். எனினும் ஐ.நா. குழுவின் இலங்கை வருகை குறித்து ரொபட் பிளேக்கிற்கு அமைச்சர் பீரிஸ் விபரித்தார். இவர்களின்
கலந்துரையாடலானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதை மையப்படுத்தியதாக இருந்தது.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலய அலுவலகத்திலிருந்து தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருகைக்கு முன்னோடியாக இக்குழுவினரின் விஜயம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment