Tuesday, September 11, 2012

ரொபர்ட் ஓ பிளக் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து வலியுறுத்துவார்

blakkeஇலங்கை வரும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் இலங்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க வேண்டியது குறித்து வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அரசாங்கத்துடன் அவர் தமது விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தின் அழுத்தங்களின் அடிப்படையிலும், ஐக்கிய நாடுகளின் தாருஸ்மன் தயாரித்த அறிக்கைக்கு எதிராகவும் ஜனாதிபதியால், கற்றுக் கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, அதன் அறிக்கை கடந்த வருடம் வெளியாகிறது.

இதன் பரிந்துரைகளை அமுலாக்குமாறு அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட போதும், அமுலாக்குவதற்கான நடவடிக்கை எதனையும் இலங்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இந்த நிலையிலேயே ரொபர்ட் ஓ பிளக் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment