காங்கிரஸ்
கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஆண்டு ஜுலை-ஆகஸ்டு மாதத்தில்
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், அவருக்கு என்ன நோய்? என்று
அறிவிக்கப்பட வில்லை. அறுவை சிகிச்சைக்குப்பின் 6 மாதம் கழித்து மீண்டும்
வெளிநாடு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
இதேபோல், கடந்த 1-ந் தேதி மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக
வெளிநாட்டுக்கு சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு
நேற்று காலையில் டெல்லி திரும்பினார். இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின்
செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவிவேதி வெளியிட்டார். மருத்துவ பரிசோதனை
முடிவுகள் அனைத்தும் நன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment