Friday, October 19, 2012

110 ஈழத் தமிழர்கள் கடலில்: கவிழ்ந்த படகை மீட்டனர் ஐக்கிய அரபு கப்பல் சேவையினர் !


கடந்த 3 தினங்களுக்கு முன்னர், அரபிக் கடலில் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்துள்ளது. இதில் 32 ஆண்களும் 78 பெண்களுமாக 110 ஈழத் தமிழர்கள் பயணித்துள்ளார்கள். படகு கவிழ்ந்து, இவர்கள் அனைவரும் கடலில் தத்தளித்தவேளை, அப்பகுதியில் பயணித்த அரபியக் கப்பல் ஒன்று இவர்கள் அனைவரையும் மீட்டுள்ளனர். தமிழர்களை மீட்ட பினாக்கிள் பிலிஸ் என்னும் இக் கப்பல் ஐக்கிய அரபு ராட்சியம் நோக்கிச் செல்வதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் கப்பல் 22ம் திகதி, ஐக்கிய அரபு சென்றுவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இக் கப்பல் கவிழ்ந்தது தொடர்பாக, இதில் பயணித்த பயணிகளின் உறவினர்கள், இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அல்லலுற்றனர். இவர்களுக்கு இச் செய்தி ஆறுதல் தரும் விடையமாக அமைந்துள்ளது. ஆபத்தான கடல் பயணத்தை தமிழர்கள் ஏன் தேர்வுசெய்கிறார்கள் என்பது, புரியாத விடையமாக உள்ளது. ஈழத்தில் உயிர் அச்சுறுத்தல் என்று சொல்லி உயிராபத்தான் கடல் பயணத்தை இவர்கள் ஏன் மேற்கொள்ளவேண்டும் ? மேலும் இவர்கள் குறிப்பாக ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தான் இங்கே மிக முக்கியமான விடையமாக உள்ளது.

No comments:

Post a Comment