தமிழ்
சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த
இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை, என நாம் தமிழர்
கட்சியின் தலைவர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் கடைசி
நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள்.
இதை பார்த்து சிங்களப் பெண் நடேசன் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம்
கேட்டார்.அவரையும் கொன்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை காலமும் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தாத இசையமைப்பாளர் இளையராஜா, இப்போது தமிழனின் விடுதலை நெருப்பை நீர்ந்திப் போக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி எனக் கூறுகிறார். தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வராமை, வருத்தம் அளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2016 ல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டை இடம்பெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரும் நபவர் மாதம் (மாவீரர் மாதத்தில்) கனடா நாட்டில் இளையராஜா அவர்கள் பெரும் இசை கழியாட்டா நிகழ்வொன்றை நடத்தவுள்ளார். ஈழத் தமிழர்களை நம்பி, அவர்கள் பணத்தில் இசைநிகழ்வை நடத்தவிருக்கும் இவர் ஏன் மாவீரர் மாதத்தை தேர்ந்தெடுக்கவேண்டும் ? 12 மாதங்களில் இவருக்கு இம்மாதம் மட்டும் தான கிடைத்தது ? என்று தமிழ் உணர்வாளர்கள் கொந்தளித்துப்போயுள்ளானர். ஆனால் நான் நினைத்தபடி இதனை நடத்துவேன், புலிகளோ இல்லை ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் எவருமே என்னை தடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் ஈழத் தமிழர் தலைகளில் முளகாய் அரைப்பது என்று இளசு முடிவெடுத்துவிட்டது போலும் !
No comments:
Post a Comment