Wednesday, October 10, 2012

2ம் லெப். மாலதி, வீரவேங்கை அன்ரன் உட்பட்ட 6 மாவீரர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள்

2nd-Lt-Malathysதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
10.10.1987 அன்று யாழ். கோட்டைப் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலில்

வீரவேங்கை அன்ரன்
(இரத்தினம் பரமேஸ்வரன் – தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.)
வீரவேங்கை நிமல்
(பொன்னையா பூபாலசிங்கம் – மிருசுவில், யாழ்ப்பாணம்.)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
கோப்பாய் பகுதியில் இந்தியப் படையினருடன் இடம்பெற்ற மோதலின்போது
2ம் லெப்டினன்ட் மாலதி

(சகாயசீலி பேதுறு – ஆட்காட்டிவெளி, மன்னார்)
2ம் லெப்டினன்ட் கஸ்தூரி
(வதனீஸ்வரி கோபாலப்பிள்ளை – வட்டக்கச்சி, கிளிநொச்சி)

வீரவேங்கை தயா

(செபஸ்ரியான் சலேற்றம்மா – பெரியநாவற்குளம், மன்னார்.)
வீரவேங்கை ரஞ்சி
(யோகம்மா கதிரேசு – ஓமந்தை, வவுனியா.)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞசில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

No comments:

Post a Comment