Wednesday, October 10, 2012

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை குழப்ப முயற்சி! திவயின

commenwealth_logoஇலங்கையில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை குழப்ப முயற்சிக்கப்பட்டு வருவதாகவும், சில சர்வதேச நிறுவனங்கள் இந்த முயற்சியை எடுத்து வருகின்றதாகவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வு அமர்வுகளின் போது, இலங்கை தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்க ஆயத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அண்மையில் லண்டனில் இலங்கைப் போர் தொடர்பிலான நூல் ஒன்று வெளியீடு செய்யப்பட்ட போது இந்த சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை இலக்கு வைத்து இலங்கைப் போர் தொடர்பில் குறும்படமொன்றை தயாரிக்க உள்ளதாக சர்ச்சைக்குரிய செனல்4 கொலைக்களம் என்ற குறும்படத்தை தயாரித்த கெலம் மெக்கர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அங்கம் வகிக்கும் நாடுகளது தலைவர்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த குறும்படம் தயாரிக்கப்பட உள்ளது.
இதேவேளை, பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசனின் நூலை மையமாகக் கொண்டு நாடகமொன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதனை உலக நாடுகளில் காட்சிப்படுத்த உள்ளதாகவும் நாடகத் தயாரிப்பாளர் கிறீஸ்டின் பேகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment