Friday, October 19, 2012

பஸ் பெயர்ப்பலகையில் 3 மொழிகளும் இல்லாவிடின் கடும் நடவடிக்கைக்கு தீர்மானம்

index(498)மூன்று மொழிகளிலும் பெயர்ப் பலகை இருக்க வேண்டுமென தனியார் பஸ்களுக்கு அறிவுறுத்தாத மாகாணசபை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக தனியார் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
சகல பஸ்களிலும் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதிக்கு முன் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பெயர்ப்பலகையை பயன்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழு போக்குவரத்து அமைச்சுக்கு பணித்திருந்தது.
பெயர்ப் பலகைகள் மூன்ற மொழிகளிலும் இல்லாததால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் பற்றி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பபாடு செய்திருந்தது.

மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்புரையை செயற்படுத்தப் போவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இலங்கை போக்குவரத்து சபையும் கூறின.
இருப்பினும், பல பஸ்கள் சிங்கள மொழி பெயர்ப்பலகையை மட்டும் கொண்டிருக்கின்றன. அதேசமயம், வடக்கு கிழக்கில் அநேகமாக தமிழில் மட்டும் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
சேவையிலுள்ள 20,000 தயினார் பஸ்கள் மாகாண போக்குவரத்து அதிகாரத்தின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment