தமிழகத்தில்
22 மணி நேரம் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அவற்றை போக்க
வேண்டும். அதனால் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர்
கட்சி பொது கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
பேசினார்.
2016 ல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்ற
தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் கிழக்கு மாவட்ட தலைவர்
சிவ.துரைப்பாண்டியன் தலைமையில் மேற்கு மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி,
நார்த்தாமலை சிவா, சிவகங்கை மாவட்ட பொருப்பாளர் மாறன், அய்யநாதன் ஆகியோர்
முன்னி லையில் நடந்தது. பொறியாளர் சேதுராமன் வரவேற்றார். கூட்டத்தில்
தலைமை
பேச்சாளர் திலீபன் மற்றும் பொருப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்.
பொதுக் கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
பேசியபோது, ‘’காங்கிரஸ், பா.ஜ.க இரு கட்சிகளும் தேசிய கட்சிகள். ஆனால்
மாநில கட்சிகள் போல செயல்பட்டு நமக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து வருகிறது.
ஆனால் தமிழகத்தில் உள்ள தி.மு.க, அ.தி.மு.க போன்ற மாநில கட்சிகள் தேசிய
கட்சிகள் போல செயல்படுகிறது.
மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழகத்திற்கு
தண்ணீர் கொடுக்க கூடாது என்று அவசர கடிதம் எழுதுகிறார். ஆனால் தமிழகத்தில்
இருந்து டெல்லிக்கு போன ப.சிதம்பரம், அழகிரி போன்றவர்கள் தண்ணீர் கொடு
என்று கடிதம் கொடுக்கவில்லை. கிருஷ்ணாவிற்கு உள்ள இன உணர்வு தமிழர்களுக்கு
இல்லை.
தமிழகத்தில் இலவசம் என்ற சொல்லை தமிழன் அகராதியில்
இருந்து அகற்றுவோம். தமிழகத்தில் 22 மணி நேரம் மின்சாரமே இல்லை. எப்ப
பார்த்தாலும் மின்சாரம் இல்லை. மின்சாரம் வந்துவிடும் என்ற கவலை வேண்டாம்.
அதனால் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடத்துவோம்.
கேரளாவில் அணு உலை இல்லை. ஆனால் அங்கு தடையில்லா
மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் கிடைக்கவில்லை.
காரணம் நமது மின் உற்பத்தியில் 75 சதவீதம் யூனிட் ரூ 3 க்கு பன்னாட்டு
முதலாளிகளுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்கிறது.
ஆனால் சொந்த மக்கள் ரூ 5 க்கு ஒரு யூனிட் மின்சாரம். அதுவும் 22 மணி நேரம் நமக்கு மின்சாரம் இல்லை.பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு நம்மை இருட்டில் போட்டுவிட்டது. மின் தடையால் பினவறைகளில் பிணங்கள் நாறுகிறது. மின் மயானத்தில் பாதி எரிந்த நிலையில் பிணங்கள் உள்ளது’’என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment