Saturday, October 20, 2012

கொள்ளையுடன் தொடர்புடைய 4 பேர் கைது; பொருட்களும் மீட்பு

கடந்த காலங்களில் நடைபெற்ற பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் பாரிய கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றுடன் தொடர்புயவர்கள் கைது செய்யப்பட்டு களவாடப்பட்ட பொருட்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீடு உடைக்கப்பட்டு 6இலட்சத்து 93 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன என்று வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கு தொடர்பிலான சந்தேக நபர் ஒருவர் இந்த ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
களவாடப்பட்ட நகைகள் செலான் வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதன்படி நீதிமன்ற கட்டளையின் பின்னர் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை 2010ஆண்டு டிசம்பர் மாதம் பருத்தித்துறையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் களவாடப்பட்டது. அதுதொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரால் விசாரணைகள் நடைபெற்றது அதனடிப்படையில் ஒக்டோபர் 11 ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட நகைகளில் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த மாதம் சுன்னாகம் சுகாதார பணிமனையிலும், உடுவில் தமிழ் மகாவித்தியாலயத்திலும், புன்னாலைக் கட்டுவன் பாடசாலை ஒன்றிலும் நீர் இறைக்கும் மோட்டர் களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து களவாடப்பட்ட பொருட்களும் சுன்னாகம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸாருக்க கிடைத்த அரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரம் கைது செய்யப்பட்டுள்ளனர். என்றார்

No comments:

Post a Comment