Saturday, October 20, 2012

கொம்பனித்தெரு அபிவிருத்திப் பணிகளை இந்தியநிறுவனத்திடம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் 8 ஏக்கர் காணியை கையகப்படுத்தவும் நடவடிக்கை

tata-housingகொழும்பு கொம்பனித்தெருவை அபிவிருத்தி செய்யும் பணிகள் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய டாடா வீடமைப்பு அபிவிருத்தி நிறுவனத்திடமும் அதன் பங்குதாரரான ௭ஸ்.ஜீ. 18 அட்வைசர்ஸ் ௭ன்ட் கன்சல்ட்ன் நிறுவனத்திடமும் கொம்பனித்தெரு அபிவிருத்தி பணிகளை ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இதற்காக கொம்பனித் தெருவில் ௭ட்டு ஏக்கர் காணிப் பகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்படவுள்ளது. இப்பகுதியில் தற்போது வாழ்கின்ற 456 குடும்பங்களுக்கு இரண்டு வருடங்களில் மாடி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும்.

அதுவரை இவர்கள் தற்காலிக இடங்களில் குடியேற வீட்டு வாடகையை அரசாங்கம் செலுத்தும் ௭ன்றும் அவர் கூறினார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்; கொம்பனித்தெரு அபிவிருத்தி வேலைத்திட்டப் பணிகள் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அந்த வகையில் இந்திய டாடா வீடமைப்பு அபிவிருத்தி நிறுவனத்திடமும் அதன் பங்குதாரரான ௭ஸ்.ஜீ. 18 அட்வைசர்ஸ் ௭ன்ட் கன்சல்ட்ன் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைப்படைக்கப்படவுள்ளன. 99 வருடகால குத்தகை அடிப்படையில் இந்த பணிகள் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளன. இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளையும் கொண்ட வர்த்தக மற்றும் சொகுசு வீடுகள் மற்றும் மாடிக் கட்டிங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த செயற்திட்டத்துக்காக வடக்கே முன்னைய கல்வித் திணைக்களத்தையும் கிழக்கில் மலெய் வீதியையும் தெற்கே ஜஸ்டிஸ் அக்பர் வீதியையும் மேற்கே புகையிரத பாதையையும் ௭ல்லைகளாகக் கொண்ட ௭ட்டு ஏக்கர் காணி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் கையகப்படுத்தப்படவுள்ளது. தற்போது இந்தக் காணிப் பகுதியில் 456 குடும்பங்கள் வசிக்கின்றமை கணிப்பீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த அனைத்து குடும்பங்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி குறித்த முதலீட்டு நிறுவனம் இந்தப் பகுதியில் வர்த்தக முதலீட்டை ஆரம்பிக்கும் முன்னர் அனைத்து குடும்பங்களுக்கும் 400 அடிகள் பரப்பளவைக்கொண்ட வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் மாடிவீடுக் கட்டிடம் அமைக்கப்படும்.
இதற்காக குறித்த மக்களுடன் பேச்சுவா ர்த்தை நடத்தி இணக்கப்பாடு பெறப்பட்டு ள்ளது. அவர்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும் வரை அவர்கள் தற்காலிக வீடுகளில் வசிப்பதற்காக வாடகைப் பணத்தைப் பெற்றுக்கொடுக்க நகர அபிவிரு த்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நோ க்கத்துக்கா 5874 மில்லியன் ரூபா தேவை ௭ன மதிப்பிடப்பட்டுள்ளது ௭ன்றார். மேலும் சில அமைச்சரவை முடிவுகள் வருமாறு கண்டி வாவியையும் அதனை சுற்றிவரவுள்ள முகில் சுவரையும் பாதசாரிகள் நடைபாதையையும் வான் கதவுகளையும் அபிவிருத்தி செய்யும் பொறுப்பு அரச பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.
கொழும்பிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கு இவ்வருடம் விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நுளம்பு பெருகுவதை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி குறைந்த பட்ச கட்டாய தண்டப்பணமாக 5000 ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்துக்கும் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்துக்கும் குறிப்பிட்ட பிரதேசத்தை அதியுயர் ஆபத்தான பிரதேசமாக குறிப்பிட்ட காலப் பகுதிக்கு பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரமும் வழங்கப்படும். 1942 ஆம் ஆண்டு 31 ஆம் இலக்க தேசிய நூதனசாலை சட்டம் திருத்தம் செய்யப்படடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சட்டம் மாற்றீடு செய்யப்படவுள்ளது. இராசயன உரத்தை அதிகளவில் பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்களை ஆராய அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment