Saturday, October 20, 2012

தமிழர் பிரச்சினைகளுக்கு மஹிந்தவிடம் தீர்வில்லை; சொல்ஹெய்ம் தெரிவிப்பு

images-2இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, தாம் கடைசியாக சந்தித்தபோது அவர், தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க எவ்வித திட்டத்தையும் கொண்டி ருக்கவில்லை  என்று நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான சமாதானத் தூதராகப் பணியாற்றியவருமான எரிக் சொல் ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் இராஜதந்திரத் தகவல்களை ஏற்றுக்கொள்வதில் அக்கறையின்றி இருந்தன என்றும்  இந்த இரண்டு தரப்பினரும் நோர்வே தரப்பின் தகவல்களுக்கும் உரிய மதிப்பளிக்கவில்லை என்றும்  சொல்ஹெய்ம் குற்றஞ்சாட்டியுள்ளார். சொல்ஹெய்மின் மேற்கண்ட கருத்துகளை “விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவல் 2007 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதியன்று, அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்காவில் காங்கிரஸ்காரர்களைப்போல, சிங்கள வாக்குகளைக் குறிவைத்து செயற்படுகிறார்.
தாம் கடைசியாக மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது அவர் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க எவ்வித திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் சிறந்த தமிழ் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மரணமானதன் பின்னர், அவர்களை உரிய நேரத்தில் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன என்றும் அவர்  தெரிவித்திருந்தார் என விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Hi there, this weekend is fastidious designed for
    me, for the reason that this time i am reading this great educational paragraph here at my
    house.
    Feel free to surf my webpage Asics Onitsuka Tiger Mexico 66

    ReplyDelete