புனர்வாழ்வு
நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று விடுதலைப் புலிகள் இயக்க
முன்னாள் போராளிகள் சிறிலங்காவின் தேசிய குறிபார்த்துச் சுடும் அணியில்
சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.சிறிலங்காப் படையினரின் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளில் 135 பேர் தடகளப் பயற்சிகளைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் மூவர் சிறிலங்காவின் குறிபார்த்துச் சுடும் தேசிய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கனகசுந்தரம் ரஜீவன், தயாபரன் தவேந்திரன், செல்லமுத்து சுருஸ்குமார் ஆகியோரே சிறிலங்காவின் தேசிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, அண்மையில் குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிகளை வழங்கியுள்ளார்.
இவர்களுக்கு வெலிசறை கடற்படைத்தளத்தில் குறிபார்த்துச் சுடுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் மூவரும் அடுத்த ஆண்டு புதுடெல்லியில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்ளவுள்ளதாக சிறிலங்கா விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment