உடல்
நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியதும் பிரதேசத்தை மாசுபடுத்தக்கூடியதுமான
பிளாஸ்ரிக் போத்தல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றுக்கு அனுமதி
அளிக்கப்பட்டுள்ளதாக கந்தானையில் வாழும் மக்கள் அதிகாரிகளிடம்
முறையிட்டுள்ளனர். 120 பேர்ச் நிலத்தில் இந்த தொழிற்சாலை அமையவள்ளதாக கந்தானை, வடக்கு வட்டகம, தேவாலய வீதியைச் சேர்ந்த மக்களே இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளனர்.
இங்கு வாழும் மக்கள் கிணற்று நீரையே பயன்படுத்துகின்றனர். அமையப்போகும் தொழிற்சாலை இந்த நீரை மாசுபடுத்திவிடும்.
பிளாஸ்ரிக்கை உருக்கும் போது காற்றில் நச்சு வாயுக்கள் கலந்துவிடும். இதனால், புற்றுநோய் உட்பட பல பயங்கர நோய்கள் உருவாகும் என அங்குள்ள மக்கள் அச்சமுற்றுள்ளனர்
.
இதுபற்றி, சுற்றுச்சூழல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு முறையிட்டுள்ளதாக அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் வினவியபோது எவரும் கருத்து தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment