Monday, October 01, 2012

கிழக்கு மாகாணசபையில் “திவிநெகும’ கூட்டமைப்பு கால அவகாசம் கோரும்

download (19)“திவிநெகும’ சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் கிழக்கு மாகாணசபை நாளை செவ்வாய்க்கிழமை விவாதிக்கவுள்ள சூழ்நிலையில் இது விடயத்தில் தீர்மான மொன்றை எடுப்பதற்கு கால அவகாசமொன்றைக் கோருவதற்கு கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுத் தீர்மானித்துள்ளது.
“திவிநெகும’ சட்டமூலத்தில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து நாம் விரிவாக ஆராய வேண்டியுள்ளது. எடுத்த எடுப்பிலேயே இதற்கு ஆதரவளித்தோ அல்லது எதிர்த்தோ எமது தீர்மானத்தை அறிவித்துவிட முடியாது. எனவே, இதற்கு கால அவகாசத்தைக் கோரத் தீர்மானித்துள்ளோம் என்று தமிழ்க் கூட்டமைப்பின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.
“எமது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் கால அவகாசத்தைத் தரவேண்டும். இல்லையேல், தமிழ் மக்களின் குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளை அது புறந்தள்ளுவதாகவே அமையும்”  என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் “திவிநெகும’ சட்டமூலத்திற்கான அங்கீகாரத்தை மாகாணசபையில் வழங்குவதா இல்லையா என்பது குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று முடிவெடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment