Sunday, October 28, 2012

ஐ.நா.வில் இலங்கை விவகாரம் குறித்து இந்திய அரசுக்கு அழுத்தம் தர தமிழக அமைச்சரவை முடிவு?

fc267cf5358d583c9a62bbf865c68298தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று மதியம் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில், சட்டப்பேரவை கூட்டத் தொடர், சட்டமன்ற வைர விழா தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த கூட்டத்தில், ஐ.நா.வில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் பற்றி விவாதிக்கப்படும் போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment