Monday, October 22, 2012

கோத்தபாயவின் மனைவிக்கு நாய் குட்டி இறக்குமதி விவகாரம்: மன்னிப்பு கோரும் சண்டே லீடர் !


கடந்த யூலை மாதம் கோத்தபாயவின் மனைவிக்கு நாய்குட்டி இறக்குமதியான செய்தி தொடர்பாக பரபரப்புத் தகவல் ஒன்றை சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்டது. கொழும்பில் இருந்து புறப்படவேண்டிய விமானம் ஒன்றை மாற்றி, அது சுவிஸ் நாட்டிற்குச் சென்று பின்னர் அங்கிருந்து திரும்பும்போது தனது மனைவிக்கு நாய் குட்டி ஒன்றைக் கொண்டுவர ஏற்பாடுகளைச் செய்துள்ளார் கோத்தபாய. இது உண்மைதானா என்று சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான பிரற்றிக்கா ஜான்ஸ் கேட்டுள்ளார். தொலைபேசியில் பேசிய கோத்தபாய அவரை கண்டபடி திட்டியுள்ளார். படுகெட்ட வார்த்தைகளால் திட்டிய கோத்தபாய அவரை அச்சுறுத்தியும் உள்ளார். இதனை சண்டே லீடர் பத்திரிகையில் அவர் வெளியிட்டார்.


இதனை அடுத்து கோத்தபாய கடும் ஆத்திரமடைந்தார். தனது பதவி அதிகாரத்தைப் பாவித்து பிரற்றிக்கா ஜான்ஸைப் பதவியில் இருந்து விரட்டியடித்தார். பின்னர் அவர் சண்டே லீடருக்கு எதிராக வழக்குத் தொடுத்தார். இதில் பிரற்றிக்கா ஜான்ஸுக்கு வாதாட சுமந்திரன் ஆஜராகினார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. பிரற்றிக்கா ஜான்ஸ் எந்தவிதத்திலும் மன்னிப்பு கேட்க்க மாட்டார் என சுமந்திரன் வாதாடியுள்ளார். இதனை அடுத்து இச் செய்தியை வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகை மன்னிப்புக்கோரவேண்டும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து சண்டே லீடர் தனது பத்திரிகை ஊடாக மன்னிப்புக் கோரவுள்ளது என்றும் மேலும் அறியப்படுகிறது.

No comments:

Post a Comment