சமாதான
காலத்தில், ஜப்பான் இலங்கைக்கான சமாதானத் தூதுவராக யசூசி அக்காஷியை
நியமித்தது. பல தடவை இலங்கை சென்ற அவர் புலிகள் கட்டுப்பாட்டுப்
பகுதிக்குச் சென்று சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் புலித்தேவன் ஆகியோரை
அடிக்கடி சந்திப்பது வழக்கம். எப்போதும் புன்னகைக்கும் தமிழ்ச்செல்வன்
அவர்கள், யசூசி அக்காஷி வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின்னர், விருந்து
உபசாரம் வழங்குவது வழக்கம். அக்காஷிக்கு பிடித்த எக் பிரைட் ரைஸ்(முட்டைச்
சோறு) பிரத்தியேகமாக அவருக்கு பரிமாறப்படுவது வழக்கம். அடிக்கடி வந்து
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உணவருந்திச் செல்லும் அக்காஷி, தெரிவித்த
சில தகவல்கள் தற்போது விக்கி லீக்ஸ் ஊடாக வெளியாகியுள்ளது. சமாதான
காலகட்டத்தில் இவர் தெரிவித்துள்ள கருத்துக்கள், ஜப்பான் நாட்டின்
முகமூடியைக் கிழித்துள்ளது.சமாதான காலத்தில், இலங்கை சென்ற அக்காஷி இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் ஒருபோதும் மகிந்தரை கைவிடக்கூடாது என்றும், மகிந்தரை எக்காரணம் கொண்டும் தள்ளிவைக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் பலம் எது என்று பார்த்து, அதனைப் பயன்படுத்தவேண்டும் என்று வேறு கூறியுள்ளார். இதனை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தலைமைக்கு அனுப்பியுள்ளது. பாதுகாப்பாக அனுப்பப்பட்ட இச் செய்தியை, விக்கி லீக்ஸ் பதிவுசெய்து தனது தரவுத் தளத்தில் இட்டுள்ளது. அதிலிருந்து அதிர்வு இணையம் இத் தரவுகளைப் பெற்றுள்ளது.
அதாவது நோர்வேயுடன் இணைந்து தாமும் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய யசூசி அக்காஷி எவ்வாறு இதயசுத்தியோடு இதில் கலந்துகொண்டிருப்பார் என்ற கேள்விகள் இதில் எழுகிறது அல்லவா ? வெளிப்படையாகவே அவர் மகிந்தரை ஆதரித்துப் பேசியுள்ள விடையம் தற்போது வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment