இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை கருவாக வைத்து, `தேன்கூடு’ என்ற புதிய படத்தை பிரபாதிஷ் சாமுவேல் தயாரித்து இருக்கிறார்.
இகோர் டைரக்டு செய்திருக்கிறார். இதில், புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட, டைரக்டர் அமீர் பெற்றுக்கொண்டார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், டைரக் டர்கள் அமீர், ஜனநாதன், புகழேந்தி தங்கராஜ், ஐந்து கோவிலான், பேராசிரியை தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் எஸ்.தாணு ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள்.
கவிஞர் காசி ஆனந்தன் பேசும்போது, ‘’தமிழ் ஈழ வரைபடத்தை முதன்முதலாக
வரைந்தவர், ஈழ தமிழர் அல்ல. இங்கே இருந்த தமிழர் தந்தை ஆதித்தனார்தான்.
அவர்தான் முதன்முதலாக தமிழ் ஈழ வரைபடத்தை உருவாக்கியவர்.
“தமிழர்கள் இலங்கையில் குடியேறியவர்கள் அல்ல. அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள்” என்று சொன்னவர், ராஜாஜி” என்றார்.
No comments:
Post a Comment