Wednesday, October 17, 2012

யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேச சர்வதேச சிறுவர், முதியோர், மாற்றாற்றலுடையோர் தினம்

pic1வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சர்வதேச சிறுவர், முதியோர், மாற்றாற்றலுடையோர் தின விழா இன்று நடைபெற்றது. சிறுவர் முதியோர் விழா நெல்லியடி தடங்கன் புளியடி ஆலய மண்டபத்தில் பிரதேச செயலர் ச.சிவசிறி தலைமையில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றல், மற்றும் இறை வணக்கத்துடன் ஆரம்பமானது.
வெண்ணிலா சிறுவர் கழகத்தைச் சேர்ந்த செல்வி இ.கவிநிலாணி வரவேற்புரையும், நெல்லியடி பிரதேச சபை முன்பள்ளிச் சிறுவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றன. வதிரி பரமானந்தா சிறுவர் முதியோர் இல்ல மாணவிகளின் குழு நடனம், உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரி மாணவிகளின் நாடகம், கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி மாணவர்களின் கரங்கள் என்ற வில்லிசை, ஆகிய கலை நிகழ்வுகள் நடைபெற்றன.



முதியோருக்கான கெரவிப்பு நிகழ்வும், சிறுவர் முதியோர்தினப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், சிறப்பு விருந்தினராக கரவெட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.நற்குணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்,

No comments:

Post a Comment