Thursday, October 04, 2012

இணையத்தினால் மாணவர்களின் எதிர்காலம் சீரழியும் அபாயம்

pb_jaysundaraஇணையத்தினால் மாணவர்களின் எதிர்காலம் சீரழியும் ஆபத்திலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
இணையத்தில் உலகளாவிய அறிவைப்பெற்றுக்கொள்ளும் பயனுள்ள பகுதியோடு எதிர்காலத்தை அடியோடு சீரழிக்கின்ற மிக மோசமான பகுதிகளும் உள்ளன. இவற்றிலிருந்து பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர்;
மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதிலும் பாடசாலையை சிறந்த முறையில் நிர்வகிப்பதிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பாடசாலைகளின் குறை நிறைகள் அதிபர்களுக்கே தெரியும். அதனை இணங்கண்டு நிவர்த்தி செய்வதிலும் பிள்ளைகளுக்குத் திருப்திகரமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலாளர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: நாம் எத்தனை கொள்கைகளை நடைமுறைப்படுத்தினாலும் எத்தகைய சட்ட திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் வகுப்புகளில் இடம்பெறும் கல்வி கற்பித்தல் – கற்றல் நடவடிக்கைகள் முறையாக இடம்பெறாவிட்டால் எதிலும் பயனில்லாமல் போகும்.
எதிர்கால சந்ததிக்காக பாரிய செயற்திட்டங்களை ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வருகிறார். சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
அதனால்தான் அனைத்துப் பாடசாலைகளையும் புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அதிபர்கள், ஆசிரியர்கள் தத்தமது பாடசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
ஆசிரியர்கள் அதிபர்களுக்குப் பாரிய பொறுப்புகள் உள்ளன. நாட்டின் நாளை சந்ததியைப் பாது காத்து முன்னேற்றும் பொறுப்பை ஜனாதிபதி அவர்கள் ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

No comments:

Post a Comment