Thursday, October 04, 2012

கல்வித்துறையில் நிலவும் வெற்றிடங்கள் வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும்

Bandulaகல்வித்துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் உட்பட அனைத்து வெற்றிடங்களும் இவ்வருட இறுதிக்குள் நிரப்பப்படும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்தோடு பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வதற்கும் இவ்வருட இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த 5ம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் நகர்ப்புறப் பாடசாலைகளன்றி கிராமியப் பாடசாலை களே முன்னணியில் திகழ்கின்றன என குறிப்பிட்ட அமைச்சர் சகல பாடசாலைகளிலும் சமநிலை பேணுவதே எதிர்காலத்திட்டம் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றற ஆசிரிய நியமனம் வழங்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; மாணவர்க ளுக்கும் பாடசாலைகளுக்கும் அச்சு றுத்தலான யுகம் ஒன்று இந்த நாட்டில் இருந்தது. இலங்கையர் பலர் தமது பிள்ளைகளின் கல்விக்காக வெளிநாடு களுக்குச் சென்றனர்.
தற்போது அந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும் பாடசாலை மாணவர்கள் சுதந்திரமாக பயமின்றி கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் முறையாகப் பங்கிடப்பாடமை உட்பட பல்வேறு பிரச்சினைகள் கல்வித் துறையில் உள்ளன. அவற்றுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையோடு மேலும் ஆயிரம் பாடசாலைகளை உயர்தரத்திற்கு மேம்படுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களையும், மனித வளங்களையும் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி எமக்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலம், விஞ்ஞான ஆசிரியர்கள் நியமனம் பெறுகின்றனர். கல்வித்துறையை மென்மேலும் கட்டியெழுப்பும் ஒரு அம்சமாக இது இடம்பெறுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்

No comments:

Post a Comment