Thursday, October 04, 2012

வேம்படி முன்னாள் அதிபர் திடீர் பணி இடைநிறுத்தம்;அமைச்சரை நம்பியதால் நிர்க்கதி

7029_NewsPGMPHovவேம்படி மகளிர் கல் லூரியின் முன்னாள் அதிபர் திருமதி ராஜினி முத்துக் குமாரன் பொதுச் சேவை ஆணைக்குழுவால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் அவருக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டுள்ளது.
வேம்படி மகளிர் கல்லூரி யின் பிரதி அதிபராகக் கட மையாற்றிய திருமதி ராஜினி முத்துக்குமாரன் கடந்த ஜூன் மாதம் பொதுச்சேவை ஆணைக்குழுவால் வேம்படியின் அதிபராக நியமிக்கப்பட்ட திருமதி வேணுகா  சண்முகரத்தினத்தைப் பதவியேற்க விடாமல் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தார்.
அதிபராக வேணுகா நியமிக்கப்பட்ட பின்னரும் திருமதி ராஜினி முத்துக்குமாரனையே அதிபராகத் தொடரச் செய்வேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவருக்கு உறுதியளித்து வந்தார். “என்னதான் நடந்தாலும் ராஜினி முத்துக்கு மாரனே அதிபராக நீடிப்பார்” என்று பல தடவைகள் மாணவிகளிடமும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இதனை நம்பி நடந்த ராஜினி தற்போது தண்டனை பெறும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
திருமதி வேணுகா சண்முகரத்தினத்திடம் அதிபர் பொறுப்புகளை திருமதி ராஜினி முத்துக்குமாரன் ஒப்படைக்க வேண்டும் என்றும் தவறினால் பொதுச் சேவை ஆணைக்குழு திருமதி ராஜினி முத்துக்குமாரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.இந்த நிலையில் பொதுச் சேவை ஆணைக்குழு திருமதி ராஜினி முத்துக்குமாரனைப் பணி இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment