Thursday, October 04, 2012

மந்தை போல அடைத்து வைக்காமல் சொந்த இடம் செல்ல அனுமதியுங்கள்; கேப்பாபிலவு மக்கள் உருக்கமான வேண்டுகோள்

4எம்மை எமது சொந்த இடங்களுக்குச் சென்று குடியமர அனுமதியுங்கள். எம்மை மந்தைகள் போல் அடைத்து வைக்கா தீர்கள் என்று கோப்பாபிலவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்கள் சொந்த இடத்தில் மீள்குடியமர்வதற்கு என்று அழைத்து வரப்பட்ட போதும் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படாது சீனியா மோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மக்கள் தமக்கு எது வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், காடுகளுக்குள் தாம் அநாதைகளாக விடப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தனர். இந்தநிலையில் பல்வேறுபட்ட அழுத்தங்கள் காரணமாக இந்த மக்கள் குடிதண்ணீர் பெறுவதற்கென கிணறுகளை அமைக்கும் பணிகளையும், மலசல கூடம் அமைக்கும் பணிகளையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.
இவை அமைக்கப்படுவதால் தாம் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாது எனவும் தம்மைத் தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
“எமக்கு எந்த வசதிகளும் செய்து தர வேண்டாம். நாம் நிம்மதியாக எமது சொந்த இடங்களுக்குச் சென்று குடியமர அனுமதித்தாலே போதும்.” என்கின்றனர் இந்த மக்கள்.இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருக்கும் எமது குடியிருப்புக் காணிகளைப் பெற்று அந்தப் பகுதிகளில் எங்களைக் குடியமர்த்துவதற்கு முல்லைத்தீவு அரச அதிபர் உட்பட உயர் அதிகாரிகளும் இராணுவத்தினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment