Tuesday, October 02, 2012

இலங்கையின் மனித உரிமைகள் சர்வதேச தரம் வாய்ந்தவையாம்; ஐ.நாவில் “புளுகினார்” மொஹான் பீரிஸ்

download (20)இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை, சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான தரமான அடையாளமாக கருதமுடியும் என முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பேதே இவ்வாறு தெரிவித்தார்.
 ஜெனிவாவில் இடம் பெறவுள்ள அமர்வுக்கு முன் னோடியாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தரம் மற்றும் குறிக்கோளை நோக்கிய பயணத்தில் உரிய பாதைக்கு தற்போது இலங்கை வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் சபைக் கூட்டத்துக்கு முன்னதாக, ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவார் என எதிர்பார்ப்பதாகவும், முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment