Tuesday, October 02, 2012

தமிழகத்தில் விடுதலை புலிகளா?

LTTE-Logo_eelam-150x150புதுடில்லி: “தமிழகத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா ?என்ற கேள்விக்குப் பதிலளித்த ராணுவ அமைச்சர் அந்தோணி, “”மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருகிறது,” என்றார்.
டில்லியில் நேற்று, ராணுவ கணக்கு துறை, ஆண்டு விழாவில் பங்கேற்ற, அமைச்சர் அந்தோணி, நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து, பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இன்னமும் அது தீர்க்கப்படாமல் இருப்பது, அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எல்லைப் பிரச்னைக்கான தீர்வில், வெளியுறவுத் துறை, ராணுவம் மற்றும் பிற அமைப்புகளின், கவலைகளும் கவனத்தில் கொள்ளப்படும். முக்கியமாக, எல்லையில் பெரிய அளவில் பதற்றத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முன்னாள் ராணுவத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைகள், கனிவுடன் பரிசீலிக்கப்பட்டுள்ளன. எனினும், இன்னும் சில பிரச்னைகள் இருப்பதாக அறிகிறோம். குறிப்பாக, “ஒரு பதவி; ஒரு பென்ஷன்’ கோரிக்கை விரைவில் தீர்க்கப்படும். “தாத்ரா’ ராணுவ வாகனங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது; அதில், அனைத்து உண்மைகளும் வெளிவரும். இவ்வாறு, அந்தோணி பேசினார். இந்த நிகழ்ச்சியில், தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, வினோத் ராய், ராணுவ தளபதி விக்ரம் சிங் உட்பட, பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment