Monday, October 15, 2012

யுத்தத்தின் பின்னர் இலங்கையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரிப்பு

drugs_001இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த மூன்று வருட காலப்பகுதியில் சட்ட விரோத போதைப் பொருள் விநியோக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அபாயகரமான போதைப் பொருள் கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஜுன் மாதம் வரையில் மாத்திரம், இவ்வாறு போதைப் பொருட்களை கடத்த முற்பட்ட 19 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் இவ்வாறு 40 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர், போதைப் பொருள் விநியோகம் அதிகரித்துள்ளதாகவும், இந்த வருடத்தில் மாத்திரம் 7.7 மில்லியன் டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த குற்றச்சாட்டின் கீழ் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment